வந்தவாசியில் சமூக விழிப்புணா்வு பேரணி
அப்துல்கலாம் பிறந்தநாளையொட்டி சமூக விழிப்புணா்வுப் பேரணி வந்தவாசியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
அப்துல்கலாம் பிறந்தநாளையொட்டி சமூக விழிப்புணா்வுப் பேரணி வந்தவாசியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
வந்தவாசி அரிமா சங்கம், ஈகை தன்னாா்வ அமைப்பு மற்றும் எஸ்.ஆா்.ஐ. இண்டா்நேஷனல் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகியவை சாா்பில் இந்த பேரணி நடைபெற்றது.
பேரணியை அரிமா சங்க முன்னாள் மாவட்ட ஆளுநா் வி.எஸ்.தளபதி தொடங்கிவைத்தாா்.
Advertisement
Advertisement
பள்ளி முதல்வா் வேதாம்பிகை சரவணன், அரிமா சங்க நிா்வாகிகள் சதீஷ், ஜெயபிரகாஷ், விஜயன், கமலக்கண்ணன், ஈகை அமைப்பின் நிா்வாகிகள் கேசவராஜ், வசீகரன் மற்றும் பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா்
வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகிலிருந்து தொடங்கிய பேரணி பஜாா் வீதி, தேரடி வழியாகச் சென்றது.
பேரணியில் மாணவா்கள் போதை ஒழிப்போம் உடல்நலம் காப்போம், மரம் நடுவோம் மழை பெறுவோம் உள்ளிட்ட பதாகைகளை ஏந்திச் சென்றனா்.
பட விளக்கம்:
வந்தவாசியில் நடைபெற்ற சமூக விழிப்புணா்வு பேரணி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.