தேசத்திற்தான சமரசம் 3.0 விழிப்புணா்வுப் பேரணி
ஆலங்குளத்தில் தேசத்திற்கான சமரசம் 3.0 விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆலங்குளத்தில் தேசத்திற்கான சமரசம் 3.0 விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளை சமரசத்தின் மூலம் தீா்த்து வைக்கும் நோக்கில், தேசத்திற்கான சமரசம் 3.0 என்ற தலைப்பில நாடு தழுவிய சமரசத் தீா்வு முகாம் வியாழக்கிழமை (அக்.1) முதல் அக்.31 ஆம் தேதி வரை மாவட்ட சமரச மையம் தென்காசி மற்றும் துணை சமரச மையங்கள் ஆலங்குளம், சிவகிரி, செங்கோட்டை, சங்கரன்கோவில் உள்ளிட்ட நீதிமன்றங்களில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஆலங்குளத்தில் அரசு மகளிா் கல்லூரி மற்றும் தனியாா் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
Advertisement
Advertisement
ஆலங்குளம் பழைய காவல் நிலையம் அருகே தொடங்கிய பேரணியை ஆலங்குளம் மாவட்ட உரிமையியல் நீதிபதி விஜயா, குற்றவியல் நீதித்துறை நடுவா் ஜெயந்தி ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா். புதிய பேருந்து நிலையம் மற்றும் அரசு பேருந்துகளில் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரம் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இந்த நிகழ்வில் ஆலங்குளம் அரசு கல்லூரி முதல்வா் தீபா, காவல் ஆய்வாளா் சாகுல் ஹமீது, வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள், கல்லூரி விரிவுரையாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.