FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பயணிகள் நிழற்குடையை சீரமைக்க கோரிக்கை

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், முதுகுளம் ஊராட்சி அச்சுதாபுரம் பிரிவு சாலையில் உள்ள பயணிகள் நிழற்குடை மிகவும் பழுதடைந்து மக்கள் பயன்பட்டுக்கு ஏற்ற நிலையில் இல்லை, அதை முறையாக சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் பராமரிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

35 வினாடிகள் முன்பு
பயணிகள் நிழற்குடையை சீரமைக்க கோரிக்கை
பகிர்:

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், முதுகுளம் ஊராட்சி அச்சுதாபுரம் பிரிவு சாலையில் உள்ள பயணிகள் நிழற்குடை மிகவும் பழுதடைந்து மக்கள் பயன்பட்டுக்கு ஏற்ற நிலையில் இல்லை, அதை முறையாக சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் பராமரிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முதுகுளம் ஊராட்சியில் உள்ள அச்சுதாபுரம் பிரிவு சாலையில் உள்ள நிழற்குடையை பயன்படுத்தி தினந்தோறும் ஏராளமான பயணிகள் பேருந்துகளுக்காக காத்திருக்கின்றனா். இந்நிலையில், நிழற்குடை முறையாக பராமரிக்கப்படாததால் பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா். மழை மற்றும் வெயில் காலங்களில் பேருந்துகளுக்காக காத்திருக்கும் பயணிகள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் நிற்க முடியாத நிலை ஏற்படுகிறது.

எனவே, சம்பந்தப்பட்ட துறையினா் அச்சுதாபுரம் பிரிவு சாலையில் உள்ள பயணிகள் நிழற்குடையை ஆய்வு செய்து, சேதமடைந்த பகுதிகளை சீரமைத்து, இருக்கை வசதி மற்றும் அடிப்படை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.