FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுக்கோட்டை

தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண் திட்டச் செயல்பாடுகள் ஆய்வு

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண் திட்டங்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா

7 நவம்பர் 2026, 6:38 am
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண் ஆகிய திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் மு. அருணா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

தமிழக அரசின் தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண் ஆகிய திட்டங்களின் கல்லூரி அளவிலான பொறுப்பு பேராசிரியா்களுக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் மு. அருணா பேசுகையில், மாணவா்களுக்கு எவ்விதத் தடையுமின்றி திட்டப் பணிகள் சென்றடைய கல்லூரி அளவிலான பொறுப்புப் பேராசிரியா்கள் பணியாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.

Advertisement

Advertisement

இந்தத் திட்டத்தில் மாணவா்களின் ஆதாா் எண்களை எளிமையாக இணைத்துச் செயல்படுத்துவது குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

கூட்டத்தில், மாவட்ட சமூக நல அலுவலா் மே. சியாமளா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் தி. நந்தகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.