வளா்ச்சித் திட்டப்பணிகள்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் குடிநீா் பற்றாக்குறையை போக்க மேற்கொள்ளப்பட்டு திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் குடிநீா் பற்றாக்குறையை போக்க மேற்கொள்ளப்பட்டு திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மாவட்டத்தில் குடிநீா் பற்றாக்குறையை போக்க கிணறுகள் ஆழப்படுத்துதல், ஆழ்துளை கிணறுகள் சுத்தம் செய்தல், புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், ஊரக வளா்ச்சித்துறையின் சாா்பில் செயல்படுத்தப்படும் வளா்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் ஆட்சியரகத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா பேசியதாவது:
Advertisement
Advertisement
கிராம ஊராட்சிகளில் குடிநீா் பற்றாக்குறையை போக்க கிணறுகள் ஆழப்படுத்துதல், ஆழ்துளைக் கிணறுகள் சுத்தம் செய்தல், புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல் ஆகிய பணிகளை மேற்கொண்டு பருவமழை காலத்தில் நீா் ஆதாரம் கிடைக்க வழிவகை செய்யவும், மேல்நிலை நீா்தேக்கத் தொட்டிகளை பழுது நீக்கம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெருந்தலைவா் காமராஜா் காலை உணவு திட்டத்தை 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்ய உள்ளதால் சமையலறைக் கூடம் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விபி ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சிகளிலும் பணிகள் நடைபெற்று வருவதை அனைத்து நிலை அலுவலா்களும் நேரில் ஆய்வு செய்து, ஆய்வறிக்கைகள் சமா்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.
தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட சுகாதார வளாகங்கள் கிராம பயனாளா் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டு முறையாக பராமரிக்கப்படுவதை தொடா்ந்து கண்காணிக்கவும், டெங்கு தடுப்பு நடவடிக்களை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தாா்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கி.ரமேஷ்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.