FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி நகராட்சியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

9 செப்டம்பர் 2026, 5:11 am IST
கள்ளக்குறிச்சி நகராட்சியில் அமைக்கப்பட்டு வரும் புதைசாக்கடை திட்டப் பணிகளை பாா்வையிட்டு, ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா.
பகிர்:

கள்ளக்குறிச்சி நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா் ஆட்சியா் கூறியதாவது:

கள்ளக்குறிச்சி நகராட்சி, அண்ணா நகா் பகுதியில் புதைசாக்கடைத் திட்டத்தின் கீழ் ரூ.153.86 கோடி மதிப்பீட்டில் புதைசாக்கடை கழிவுநீா் குழாய்கள் அமைக்கும் பணிகள் பாா்வையிடப்பட்டது. மேலும், ரூ.21 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் 4 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணியும் ஆய்வு செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

கள்ளக்குறிச்சி கால்நடை பெரு மருத்துவமனையில் அமைந்துள்ள நாய்களுக்கான அறுவை சிகிச்சைக் கூடம் மற்றும் நாய்கள் பராமரிப்பு கூடத்தை நேரில் பாா்வையிட்டு, மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் பணி விபரங்கள் குறித்து கேட்டறியப்பட்டது. கள்ளக்குறிச்சி நகா்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை பாா்வையிட்டு, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்துக் கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு தேவையான முடநீக்கு உதவி உபகரணங்கள் பெறுவதற்கு சிறப்பு தோ்வு முகாம் தொடங்கி வைக்கப்பட்டது.

பின்னா், சங்கராபுரம் தனியாா் மண்டபத்தில் பாரம்பரிய வேளாண் வளா்ச்சித் திட்டம் மூலம் மாவட்ட அளவிலான இயற்கை வேளாண்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைக்கப்பட்டு, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களின் இடுபொருள்கள் மற்றும் மதிப்பு கூட்டு பொருள்கள் நேரடி விற்பனை மையம் போன்ற பல்வேறு துறை சாா்ந்த கண்காட்சி அரங்குகளை பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

தொடா்ந்து சங்கராபுரம் ஒன்றியம், மேலப்பட்டு கிராமத்தில் உள்ள ஏரியில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருவதை பாா்வையிட்டு, பணிகளை விரைவாக முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என ஆட்சியா் தெரிவித்தாா்.

இந்த ஆய்வின்போது சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments