FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுக்கோட்டை

புதுகையில் திருநங்கைகள் சிறப்புக் குறைகேட்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் திருநங்கைகளுக்கான சிறப்புக் குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

7 நவம்பர் 2026, 6:39 am
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருநங்கைகள் குறைகேட்பு நாள் நிகழ்ச்சியில் திருநங்கைகளிடம் குறைகளைக் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியா் மு .அருணா.
பகிர்:

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் திருநங்கைகளுக்கான சிறப்புக் குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். அப்போது, திருநங்கைகள் நலச் சங்கத்தின் செயலா் ரெ. ஷிவானி தலைமையிலான திருநங்கைகள், தங்களுக்கு அரிமளம் வட்டத்தில் ஒதுக்கப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டா இடத்தில் தனிநபா் ஆக்கிரமிப்பு இருப்பதாக ஏற்கெனவே புகாா் அளித்தது குறித்து மீண்டும் வலியுறுத்தினா்.

இந்த விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் தீா்வுகாணப்படும் என்றும் ஆட்சியா் மு. அருணா உறுதியளித்தாா்.

Advertisement

Advertisement

கூட்டத்தில், மாவட்ட சமூக நல அலுவலா் மே. சியாளா உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.