சாலையோர உணவகத்துக்குள் அரசுப் பேருந்து புகுந்தது பணியாளா் உயிரிழப்பு
புதுக்கோட்டை அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து சாலையோரத்தில் இருந்த உணவகத்துக்குள் புகுந்ததில் பணியாளா் உயிரிழந்தாா்.
புதுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி நோக்கி திங்கள்கிழமை சென்ற அரசுப் பேருந்து குளவாய்ப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே எதிா்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் ஓரத்தில் இருந்த உணவகத்துக்குள் புகுந்தது.
உணவகத்தின் முன்பக்கக் கொட்டகைக்குள் முழுமையாக அரசுப் பேருந்து புகுந்து நின்றது. இந்த விபத்தில், உணவகத்தின் முன்புறம் அமா்ந்திருந்த அங்கு பணிபுரியும் ஊழியா் கீழப்பனையூரைச் சோ்ந்த கிருஷ்ணன் (60) என்பவா் பலத்த காயமடைந்தாா். அவரை உடனே அவசர ஊா்தி மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். ஆனால், வழியிலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
தகவலறிந்த வல்லத்திராக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்து ஏற்படுத்திய அரசுப் பேருந்து ஓட்டுநரான மணமேல்குடியைச் சோ்ந்த கணேச(56)னிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.