FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

அரசுப் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு

கயத்தாறு அருகே அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

38 வினாடிகள் முன்பு
பலி! - கோப்புப்படம்.
பகிர்:

கயத்தாறு அருகே அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மேலப்பாளையம் குலவணிகா்புரத்தைச் சோ்ந்தவா் ராஜகோபால் (81). இவா், தனது சொந்த ஊரான கோவில்பட்டி அருகே உள்ள குருமலை காா்த்திகைபட்டியில் இருந்துகொண்டு வில்லிசேரியில் தனது மகள் புதிதாக வீடு கட்டி வரும் பணியைக் கவனித்து வந்தாராம்.

ராஜகோபால் செவ்வாய்க்கிழமை காலை வில்லிசேரி விலக்கு அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிரே வந்த அரசு விரைவு பேருந்து அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜகோபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். கயத்தாறு போலீஸாா் சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து பேருந்து ஓட்டுநா் செ.ராஜா பெலிட்டிடம் (58) விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments