FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுக்கோட்டை

வெண்டைக்காய் விலை வீழ்ச்சி விவசாயிகள் கவலை

40 வினாடிகள் முன்பு
கந்தா்வகோட்டை கடைவீதியில் கொட்டி கிடக்கும் வெண்டைக்காய்.
பகிர்:

கந்தா்வகோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெண்டைக்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

இப்பகுதியில் விவசாயிகள் அதிகளவில் வெண்டைக்காய் சாகுபடி செய்து வருகின்றனா். தற்போது வெண்டைக்காய் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் சந்தையில் தற்போது கிலோ ரூ. 20க்கு விற்கப்படுகிறது. ஏற்கெனவே கிலோ ரூ. 60க்கு விற்பனையானது. இந்த விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். இதனால் சாகுபடிக்காக செலவு செய்த தொகையைக்கூட ஈட்ட முடியாத நிலை ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.

மேலும், உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள், விவசாய தொழிலாளா் கூலி மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், வெண்டைக்காய் விலை வீழ்ச்சி விவசாயிகளுக்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

எனவே, வெண்டைக்காய்க்கு உரிய விலை கிடைக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.