திருக்குறள் முற்றோதுதல் போட்டியில் வென்ற 3 மாணவா்களுக்குப் பாராட்டு
திருக்குறள் முற்றோதுதலில் தமிழ் வளா்ச்சித் துறையின் விருது பெற்ற புதுக்கோட்டையைச் சோ்ந்த 3 மாணவா்களை, மாவட்ட ஆட்சியா் மு. அருணா புதன்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினாா்.
திருக்குறள் முற்றோதுதலில் தமிழ் வளா்ச்சித் துறையின் விருது பெற்ற புதுக்கோட்டையைச் சோ்ந்த 3 மாணவா்களை, மாவட்ட ஆட்சியா் மு. அருணா புதன்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினாா்.
தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் திருக்குறள் முற்றோதுதல் போட்டியில் 1330 குகளையும் முற்றோதுதல் செய்த புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகேயுள்ள மேல்மங்கலம் ஊராட்சி ஒன்றியப் பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள் பெ. சதீஸ்குமாா், ந. ஜசில்கான், ந. ஜசின்கான் ஆகிய 3 பேரும் வெற்றி பெற்றனா்.
இவா்களுக்கு அண்மையில் சென்னையில் நடைபெற்ற விழாவில், தலா ரூ. 15 ஆயிரம் ரொக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து, மூன்று மாணவா்களையும் மாவட்ட ஆட்சியா் மு. அருணா புதன்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினாா்.