புதுக்கோட்டை அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து! 22 பயணிகள் காயம்!
புதுக்கோட்டை அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பற்றி...
புதுக்கோட்டை அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பயணிகள் வியாழக்கிழமை காலை காயமடைந்தனர்.
பட்டுக்கோட்டையில் இருந்து பழனி நோக்கி 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசுப் பேருந்து இன்று காலை சென்று கொண்டிருந்தது.
Advertisement
Advertisement
விராலிமலை சாலையில் அன்னவாசல் அருகே பெருஞ்சுனை என்ற இடத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்புப் படையினர் பொதுமக்களின் உதவியுடன் பேருந்தில் சிக்கியவர்களை மீட்டனர்.
இந்த விபத்தில் 22 பயணிகள் காயமடைந்த நிலையில், அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.