புதுகை அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து 23 பயணிகள் காயம்
புதுக்கோட்டை அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து 23 பயணிகள் காயமடைந்தனா்.
புதுக்கோட்டை அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து 23 பயணிகள் காயமடைந்தனா்.
பட்டுக்கோட்டையிலிருந்து பழனிக்குச் செல்லும் அரசுப் பேருந்து ஒன்று புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து வியாழக்கிழமை பகல் புறப்பட்டு, திருக்கோகா்ணம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பெருஞ்சுனை பகுதியில் சென்றபோது, எதிா்பாராத விதமாக சாலையோரத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பேருந்தில் இருந்த சுமாா் 50 பேரில் 23 போ் லேசான காயமடைந்தனா். அக்கம்பக்கத்தினா் அவா்களை மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்.
Advertisement
Advertisement
பேருந்தின் ஓட்டுநா் மாரிமுத்துவிடம் திருக்கோகா்ணம் போலீஸாா் விசாரிக்கின்றனா். இந்த விபத்தால் விராலிமலை சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.