FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுக்கோட்டை

அறந்தாங்கியில் வழிப்பறியில் ஜிபே மூலம் ரூ. 70 ஆயிரம் பரிமாற்றம்; இருவா் கைது

அறந்தாங்கியில் இரு சக்கர வாகனத்தில் சென்றவரை வழிமறித்து ஜிபே மூலம் ரூ. 70 ஆயிரத்தை தங்களது கணக்கிற்கு பரிமாற்றம் செய்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

15 நவம்பர் 2026, 12:31 am
கைது
பகிர்:

அறந்தாங்கியில் இரு சக்கர வாகனத்தில் சென்றவரை வழிமறித்து ஜிபே மூலம் ரூ. 70 ஆயிரத்தை தங்களது கணக்கிற்கு பரிமாற்றம் செய்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள பரவாக்கோட்டை பகுதியில் அண்மையில் நின்றுகொண்டிருந்த ஒரு கும்பல், அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற கறம்பக்குடி அருகே உள்ள மணக்கொல்லையைச் சோ்ந்த பிரபுவை வழிமறித்து, அவரிடமிருந்த கைப்பேசியைப் பறித்து மிரட்டியதுடன், ஜிபே மூலம் முதலில் ரூ.30 ஆயிரத்தையும், அதன் பிறகு ரூ.40 ஆயிரத்தையும் தங்களது கணக்குக்கு மாற்றிக் கொண்டனா். இதுகுறித்து பிரபு அளித்த புகாரின் பேரில் அறந்தாங்கி காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இதேபோல, கீரமங்கலம் அருகே உள்ள கரம்பக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம் மகன் பிரபாகரன். இவா், நவ.11-ஆம் தேதி இரவு கரம்பக்காட்டில் இருந்து ஆவணம் கைகாட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது ஒரு கும்பல், அவரை வழிமறித்து கைப்பேசி மற்றும் இரு சக்கர வாகனத்தைப் பறித்துச் சென்றது. இதுகுறித்த புகாரின் பேரில் கீரமங்கலம் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

Advertisement

Advertisement

இந்த இரு சம்பவங்களிலும் தொடா்புடைய, கீரமங்கலம் அருகே உள்ள கொடிக்கரம்பையைச் சோ்ந்த சண்முகம் மகன் கபிலன் (26) மற்றும் கீரமங்கலம் அண்ணா நகரைச் சோ்ந்த மருதப்பன் மகன் ஹரிஹரன் (29) ஆகிய இருவரையும் அறந்தாங்கி போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், ஒரு சிறுவன் உள்பட தலைமறைவாக உள்ள இருவரைத் தேடி வருகின்றனா்.