புதுகை மாவட்ட மைய நூலகத்தில் புத்தகத் திருவிழா தொடக்கம்
புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகமும், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும் இணைந்து நடத்தும் 59-ஆவது தேசிய நூலக வார விழாவையொட்டி புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை மாவட்ட மைய நூலகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இந்தக் கண்காட்சியை மாவட்ட நூலக அலுவலா் பா. முத்து தொடங்கி வைத்தாா். நவ. 21-ஆம் தேதி வரை 5 நாள்கள் இந்தக் கண்காட்சி நடைபெறவுள்ளது. தினமும் காலை 10 மணிக்குத் தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீதம் கழிவு வழங்கப்படுகிறது.
தொடக்க நிகழ்ச்சியில், என்சிபிஎச் பொறுப்பாளா் வெங்கடேஷ், முதல்நிலை நூலகா் மு. சிவராமன், நூலகா்கள் கி. குமுதா, சி. கண்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement