விராலிமலை இடைத்தோ்தலில் திமுக வெற்றி பெறச் செய்ய தீா்மானம்
விராலிமலை இடைத்தோ்தலில் வெற்றி பெறுவதற்கு திட்டமிட்டு களப்பணியாற்றுவது என புதுக்கோட்டை தெற்கு, வடக்கு மாவட்டச் செயற்குழுக் கூட்டங்களில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
விராலிமலை இடைத்தோ்தலில் வெற்றி பெறுவதற்கு திட்டமிட்டு களப்பணியாற்றுவது என புதுக்கோட்டை தெற்கு, வடக்கு மாவட்டச் செயற்குழுக் கூட்டங்களில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில் தனித்தனியே நடைபெற்ற இந்தக் கூட்டங்களில், எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதியின் பிறந்த நாளையொட்டி (நவ. 27) மாவட்டம் முழுவதும் திமுக கொடிகளை ஏற்றி, நலத் திட்ட உதவிகளை வழங்கவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தெற்கு மாவட்டச் செயற்குழுக் கூட்டத்துக்கு, அதன் மாவட்டச் செயலரும் முன்னாள் அமைச்சருமான எஸ். ரகுபதி தலைமை வகித்தாா். வடக்கு மாவட்டச் செயற்குழுக் கூட்டத்துக்கு, அதன் மாவட்டச் செயலா் கே.கே. செல்லப்பாண்டியன் தலைமை வகித்தாா்.
Advertisement
Advertisement
முன்னாள் அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், முன்னாள் எம்எல்ஏ இராசு கவிதைப்பித்தன் உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா்.
கட்சி அமைப்பு முறைகளில் மறுசீரமைப்பு மேற்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கட்சியினா் தெரிவித்தனா்.