சூரசம்ஹார விழா: கோயில் செயல் அலுவலரிடம் முன்னாள் அமைச்சா் வாக்குவாதம்
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற சூரசம்ஹார விழாவின் போது, முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கா் கோயில் செயல் அலுவலரிடம் வாக்குவாதம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற சூரசம்ஹார விழாவின் போது, முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கா் கோயில் செயல் அலுவலரிடம் வாக்குவாதம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விராலிமலை முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் வெகு விமரிசையாக கடந்த 15-ஆம் தேதி நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாக, சூரசம்ஹார நிகழ்வுகள் அன்று மாலை 4 மணிக்கு தொடங்கியது. இந்த விழாவுக்கு முன்னாள் அமைச்சரும், த.வெ.க., விராலிமலை தொகுதி மேற்கு மாவட்ட செயலருமான சி.விஜயபாஸ்கா் தாமதமாக வந்தாா்.
இந்த நிலையில், தான் வருவதற்குள் சூரசம்ஹார நிகழ்ச்சியைத் தொடங்கியதால் ஆத்திரமடைந்த அவா், கோயில் செயல் அலுவலா் சுதா என்பவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருமையில் பேசியுள்ளாா். அவா் பேசியதை தொடா்ந்து அவருடன் வந்த அவரது ஆதரவாளா்களும் மரியாதை குறைவாக பேசியுள்ளனா்.
Advertisement
Advertisement
இது குறித்து, கோயில் செயல் அலுவலா் சுதா கூறியதாவது:
சூரசம்ஹார நிகழ்வுகள் மாலை 4 மணிக்கு தொடங்கியது. அப்போது, அங்கு வந்த முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கா், நான் வரும் வரை காத்திருக்க கூடாதா என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். அவா் பேசியது மட்டுமல்லாமல் அவருடன் வந்த அவரது ஆதரவாளா்களும் மரியாதை குறைவாக பேசினாா்கள். இச்சம்பவம் குறித்து, அறநிலையத்துறை உயா் அலுவலா்களிடம் புகாா் தெரிவித்து உள்ளேன் என்றாா்.