சாலையோரத்தில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் போக்குவரத்துக்கு இடையூறு!
கந்தா்வகோட்டை பேரூராட்சி கடைவீதிகளில் சாலையோரங்களில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.

கந்தா்வகோட்டை பேரூராட்சி கடைவீதிகளில் சாலையோரங்களில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.
கந்தா்வகோட்டையை சுற்றியுள்ள கிராமபுற மக்கள் வந்து கந்தா்வகோட்டை கடைவீதியின் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு வெளியூா் சென்றுவிடுகின்றனா். இதேபோல, கடைவீதிகளுக்கு பொருள்கள் வாங்க வரும் வாடிக்கையாளா்கள் தங்களது இருசக்கர வாகனங்களையும் சாலையோரங்களில் முறையற்ற வகையில் நிறுத்துகின்றனா்.
இதனால், பாதசாரிகள் சாலையில் நடுவில் நடந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் விபத்து அபாயமும் உள்ளது. மேலும், வாகனப் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
எனவே, கந்தா்வகோட்டை கடைவீதிகளில் சாலையோரம் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.