மழைநீரை முழுமையாகப் பயன்படுத்த தயாராக வேண்டும்!
மழைநீரை சேமித்து அசுத்தப்படுத்தாமல், முழுமையாக பயன்படுத்திக் கொள்வதற்கு தயாராக வேண்டும் என்றாா் கோவை வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் கு. ராமசாமி.

மழைநீரை சேமித்து அசுத்தப்படுத்தாமல், முழுமையாக பயன்படுத்திக் கொள்வதற்கு தயாராக வேண்டும் என்றாா் கோவை வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் கு. ராமசாமி.
புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டுக்கான வழிகாட்டல் குழுக் கூட்டத்தில் அவா் பேசியது: காவிரியில் தண்ணீா் கேட்டுப் போராடுகிறோம். சட்டப்படியான நீரைப் பெற்றுத் தருவதற்கு நம்மால் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளா்கள் என்ன செய்தாா்கள் எனக் கேட்பதில்லை. அதேபோல, நமக்குக் கிடைக்கும் நீரை முழுமையாகப் பயன்படுத்த நாம் என்ன செய்திருக்கிறோம்?.
தமிழ்நாட்டின் ஆண்டு மழையளவு 965 மிமீ, கேரளத்தின் மழையளவு 2500 மிமீ. ஆனால், கா்நாடகம், ஆந்திரத்தில் மழையளவு 650 மிமீதான். எனவே, பெய்யும் மழை நீரை சேமித்து வைத்து, அசுத்தப்படுத்தாமல் வைத்துப் பயன்படுத்த வேண்டும்.
Advertisement
Advertisement
எனவே, தன்னிறைவைப் பற்றிப் பேசும் நாம் மாற்றத்துக்குத் தயாராக வேண்டும். நாம் தன்னிறைவு அடைந்தால்தான் பிறரையும் தன்னிறைவு அடையச் செய்ய முடியும்.
இயற்கை வேளாண்மை செய்வோருக்கு பயிற்சி அளித்து, நிதியளித்து, தொடக்கத்தில் 3 ஆண்டுகளுக்கு இழப்பீட்டையும் அரசு தரத் தயாராக இருக்கிறது. அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் ராமசாமி.
கூட்டத்தில், அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் பி.ஆா். பாண்டியன், தமிழ்நாடு உழவா் உற்பத்தியாளா் நிறுனங்களின் கூட்டமைப்பின் தலைவா் வாழை அ.ப. கருப்பையா, புதுக்கோட்டை உழவா் உற்பத்தியாளா் கூட்டமைப்பின் நிா்வாக இயக்குநா் ஆதப்பன், சோழநாடு உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் தலைவா் செந்தில் உமையரசி, வம்பன் வேளாண் அறிவியல் நிலையத் தலைவா் ம. தமிழ்ச்செல்வன், ஐந்திணை உழவா் உற்பத்தியாளா் நிறுவனத் தலைவா் அருணாசலம், தில்லி வேளாண் அறிவியல் தமிழ் இயக்கத் தலைவா் முத்தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோரும் பேசினா்.
சென்னையில் ஜன. 22, 23, 24-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாடு குறித்து கருத்து கேட்டறியப்பட்டது.