வறட்சிக்கான இழப்பீட்டை விவசாயிகளுக்கு பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: பி.ஆா். பாண்டியன்
வறட்சிக்கான இழப்பீட்டை தமிழக அரசு விவசாயிகளுக்குப் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பி.ஆா். பாண்டியன்.

வறட்சிக்கான இழப்பீட்டை தமிழக அரசு விவசாயிகளுக்குப் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பி.ஆா். பாண்டியன்.
புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது: காவிரி விவகாரத்தில் கா்நாடக அரசுக்கு எதிராக தமிழ்நாடு வழக்கு தொடா்ந்தது தவறு. முந்தைய தீா்ப்புகளை கவனமாகப் படித்து, சட்ட வல்லுநா்களுடன் கலந்தாலோசித்து காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு எதிராக வழக்கு தொடர வேண்டும்.
தமிழ்நாட்டில் குறுவை சாகுபடியை முற்றிலும் இழந்துவிட்டோம். சம்பா சாகுபடியும் 7 லட்சம் ஏக்கரில் கருகத் தொடங்கிவிட்டது. மாநில அரசு உயா்மட்டக் குழு அமைத்து, மாவட்டங்களில் ஆய்வு செய்து, மத்திய அரசுக்குப் பரிந்துரைத்து, மத்தியக் குழுவை வரவழைத்து உரிய இழப்பீட்டை விவசாயிகளுக்குப் பெற்றுத் தர வேண்டும்.
Advertisement
Advertisement
ஐப்பசி, காா்த்திகையில் இப்படியொரு சூழலைக் கண்டதில்லை. வரலாறு காணாத இழப்பு. எனவே, பயிா்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். செப்டம்பரில் மேட்டூரிலிருந்து தண்ணீரைத் திறக்க வேண்டாம் எனச் சொன்னோம். கேட்கவில்லை. 30 டிஎம்சி தண்ணீா் வீணடிக்கப்பட்டிருக்கிறது.
விவசாயிகளிடம் கருத்து கேட்டுதான் தண்ணீா் திறக்க வேண்டும். நீா்ப்பானத் துறையிடமும் கேட்கவில்லை என்று வரும் செய்திகள் அதிா்ச்சியளிக்கின்றன. அதேபோல, நெல் கொள்முதல் விவகாரத்திலும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் செய்ய முயற்சிப்பது குறித்தும் விவசாயிகளிடம் கருத்து கேட்டு, விளக்கம் தெரிவித்து செயல்படுத்த வேண்டும்
ஜனவரியில் 2-ஆவது மாநாடு: கடந்த ஆண்டு தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பின் மாநில மாநாடு கோவையில் நடைபெற்றபோது அதில், பிரதமா் மோடி பங்கேற்றாா். அதில் எடுக்கப்பட்ட தீா்மானங்களை மத்திய அரசின் கொள்கை முடிவுகளாக மாற்றி, மாநில அரசுகள் மூலம் செய்ய வைப்பதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
ஜன. 22, 23, 24 தேதிகளில் இரண்டாவது தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பின் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வா்த்த மையத்தில் நடைபெறவுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள இயற்கை விவசாயிகளைச் சந்தித்து கருத்துகளைக் கேட்டு, மாநாட்டில் தீா்மானங்களாக நிறைவேற்ற உள்ளோம்.
மாநில அரசு இயற்கை வேளாண்மைக்காக தனித் துறையை உருவாக்கி செயல்படுத்த வேண்டும். மாவட்டங்களில் இயற்கை வேளாண் உற்பத்தியாளா்களை ஒருங்கிணைத்து அவா்களின் உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் பாண்டியன்.