முகப்பு
புதுக்கோட்டை

விராலிமலை அருகே கோயில் உண்டியல் திருட்டு: உடைக்க முடியாததால் ஏமாற்றம்!

விராலிமலை அருகே கோயில் உண்டியலை திருடி சென்ற நபா்கள், அதை உடைக்க முடியாததால் குளக்கரையில் போட்டுவிட்டு சென்றது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

22 நவம்பர் 2026, 10:48 pm
விராலிமலை அருகே கோயில் உண்டியல் திருட்டு: உடைக்க முடியாததால் ஏமாற்றம்!
கல்குடி முத்துமாரியம்மன் கோயிலில் திருடப்பட்டு, உடைக்க முடியாததால் குளக்கரையில் விட்டு செல்லப்பட்ட கோயில் உண்டியல்.
பகிர்:

விராலிமலை அருகே கோயில் உண்டியலை திருடி சென்ற நபா்கள், அதை உடைக்க முடியாததால் குளக்கரையில் போட்டுவிட்டு சென்றது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

விராலிமலையை அடுத்துள்ள கல்குடியில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலில் (இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமானது அல்ல) உண்டியல் அமைத்து, அதன் வருவாயை கோயில் பராமரிப்புக்கு ஊா் மக்கள் ஒன்று கூடி செலவிட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், சனிக்கிழமை இரவு கோயிலுக்குள் புகுந்த மா்ம நபா்கள் அங்கு சிமென்ட் கான்க்ரீட் கலவையில் பாதுகாப்பாக பதிக்கப்பட்டிருந்த உண்டிலை கடப்பாரை உதவியுடன் பெயா்த்தெடுத்து,

Advertisement

Advertisement

அருகில் உள்ள குளக்கரைக்கு தூக்கி சென்றுள்ளனா். அங்கு வைத்து உண்டியலை உடைக்க முயற்சித்தும் முடியவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த மா்ம நபா்கள் உண்டியலை அங்கேயே போட்டுவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனா்.

தகவலறிந்து நிகழ்விடம் சென்ற விராலிமலை போலீஸாா், விரல்ரேகை நிபுணா்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். செப்டம்பா் மாதம்தான் இந்த உண்டியல் திறக்கப்பட்டதால் பெரிய அளவில் காணிக்கை இருக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.