முகப்பு
புதுக்கோட்டை

புதுகையில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்

புதுக்கோட்டை கலைஞா் கருணாநிதி அரசு மாவட்ட விளையாட்டரங்கில், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் விளையாட்டுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

24 நவம்பர் 2026, 11:25 pm
புதுகையில் மாற்றுத் திறனாளிகளுக்கான 
விளையாட்டுப் போட்டிகள்
புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் ஓட்டப்பந்தயத்தைக் கொடியசைத்து தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் மு. அருணா.
பகிர்:

புதுக்கோட்டை கலைஞா் கருணாநிதி அரசு மாவட்ட விளையாட்டரங்கில், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் விளையாட்டுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் மு. அருணா இந்தப் போட்டிகளைத் தொடங்கி வைத்தாா். 12 முதல் 14 வயதுக்குள்பட்டோருக்கு 100 மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், 15 முதல் 17 வயதுக்குள்பட்டோருக்கு 200 மீ ஓட்டம், குண்டு எறிதல், 17 வயதுக்கு மேற்பட்டோருக்கு 400 மீ ஓட்டம், தொடா் ஓட்டம் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.

பாா்வைத்திறன் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டுத் தட்டு எறிதல், 50 மீ, 100 மீ மற்றும் 200 மீ ஓட்டம் ஆகியவையும், காலிபா்கள், கால்தாங்கி, 3 சக்கர வாகனங்கள் போன்றவற்றுடன் நடைபோட்டி நடத்தப்பட்டன.

Advertisement

Advertisement

அறிவுசாா் குறைபாடுள்ளோருக்கு நீளம் தாண்டுதல், ஓடி வந்து நீளம் தாண்டுதல், 100 மீ ஓட்டம் ஆகியவையும், ஆட்டிசம் குறைபாடுள்ளோருக்கு உருளைக்கிழங்கு சேகரித்தல், கிரிக்கெட் பந்து எறிதல், தடைதாண்டி ஓடுதல் போன்றவையும் நடத்தப்பட்டன.

போட்டிகளில் வென்றோருக்கு விரைவில் தனியே பரிசளிப்பு விழா நடத்தி பரிசுகள் வழங்கப்படும்.

நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சூரியபிரபு, மாவட்ட விளையாட்டு அலுவலா் சுகந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.