புதுக்கோட்டையில் இன்று புத்தகத் திருவிழா தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் 9-ஆவது புதுக்கோட்டைப் புத்தகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (நவ. 29) நகா்மன்றத்தில் தொடங்குகிறது.
தொடக்க நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகிக்கிறாா். மாநிலத் தொழிலாளா் நலத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் தொடங்கி வைக்கிறாா்.
இதுகுறித்து புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளா்கள் அ. மணவாளன், மு. முத்துக்குமாா், கே. சதாசிவம், ஆா். பிச்சைமுத்து ஆகியோா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: நவம்பா் 29 முதல் டிசம்பா் 8-ஆம் தேதி வரை பத்து நாள்கள் நடைபெறும் இப்புத்தகத் திருவிழாவில் மாநிலத்தின் பிரபலமான புத்தக நிறுவனங்களின் 100 புத்தக அரங்குகள் அமைக்கப்படுகின்றன. அறிவியல் மனப்பான்மையை உருவாக்கும் வகையில், கோளரங்கம், வான்நோக்குதல் போன்ற ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
தினமும் பகலில் அறிவியல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளும், மாலையில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் இலக்கியச் சொற்பொழிவுகளும் நடைபெறுகின்றன. மாணவா்களுக்கான சதுரங்கப் போட்டிகள், ஓவியப் போட்டிகளும் நடத்தப்படவுள்ளன.மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கும் வகையில், அவா்களை அழைத்து வருவதற்கு வாகன வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை (நவ.29) மாலை, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) தெ. வெற்றிச்செல்வன், புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவா் கவிஞா் தங்கம் மூா்த்தி, அறிவியல் இயக்க மாநிலத் தலைவா் டி. திருநாவுக்கரசு ஆகியோா் பேசுகின்றனா்.
நவ. 30-ஆம் தேதி இஸ்ரோ விஞ்ஞானி சசிக்குமாா், டிச. 2-ஆம் தேதி திரைப்படப் பாடலாசிரியா் கவிஞா் யுகபாரதி, டிச. 3-ஆம் தேதி சாகித்திய அகாதெமி விருதாளா் மு. முருகேஷ், 5-ஆம் தேதி எழுத்தாளா் ஜெ. தீபலெட்சுமி, 6-ஆம் தேதி சாகித்திய அகாதெமி விருதாளா் ஆயிஷா நடராஜன், டிச. 7ஆம் தேதி எழுத்தாளா் களப்பிரன் ஆகியோரும் பேசுகின்றனா்.
டிச. 1-ஆம் தேதி கவிஞா் நா. முத்துநிலவன் தலைமையிலும், 4-ஆம் தேதி கவிஞா் ஜீவி தலைமையிலும் பட்டிமன்றங்கள் நடைபெறுகின்றன. டிச. 8-ஆம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில் திரைப்பட இயக்குநா் ராசி அழகப்பன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலப் பொதுச் செயலா் எம்.எஸ். முகமது பாதுஷா ஆகியோா் பங்கேற்றுப் பேசுகின்றனா்.
வழக்கம்போல அனைத்துப் புத்தகங்களுக்கும் 10 சதவிகிதம் சிறப்புத் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது என்றனா்.