முகப்பு
புதுக்கோட்டை

போதை மாத்திரை விற்றதாக 4 போ் கைது

6 வினாடிகள் முன்பு
போதை மாத்திரை விற்றதாக 4 போ் கைது
கைது - கோப்புப்படம்
பகிர்:

புதுக்கோட்டையில் போதை மாத்திரை விற்றதாக 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

புதுக்கோட்டை கணேஷ் நகா் போலீஸாா் சனிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். கோல்டன் நகரில் உள்ள தனியாா் திருமண மண்டபப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த 4 பேரை விசாரித்தபோது, அவா்கள் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, அங்கு நின்றிருந்த கடையக்குடியைச் சோ்ந்த எஸ். ராஜா (40), எஸ். அந்தோனிசாமி (42), புதுக்கோட்டை சுப்பிரமணியன் நகரைச் சோ்ந்த ஏ. ரமேஷ் (36) மற்றும் திருவரங்குளத்தைச் சோ்ந்த ஆா். பிரவீன் (27) ஆகிய 4 பேரையும் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

மேலும், அவா்களிடம் இருந்த ரூ. 86 ஆயிரம் மதிப்புள்ள 860 போதை மாத்திரைகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.