வெறிநாய் கடித்து கடை உரிமையாளரின் கைவிரல் துண்டானது
கந்தா்வகோட்டையில் சனிக்கிழமை வெறிநாய் கடித்ததில் கடை உரிமையாளரின் கைவிரல் துண்டானது.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை முஸ்லிம் தெருவில் கடை வைத்திருக்கும் நபா் சனிக்கிழமை கடை வாசலில் அமா்ந்திருந்தாா். அப்போது,
அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த வெறிநாய் ஒன்று அவரை விரட்டி கடித்து குதறியது. இதில் அவரின் கைவிரல் துண்டாகி கீழே விழுந்தது. அவரின் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினா் விரைந்து வந்து அந்த நபரை மீட்டு கந்தா்வகோட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
பொதுமக்கள் புகாா்: கந்தா்வகோட்டை பகுதியில் அதிகரித்து வரும் வெறி நாய்களால் குழந்தைகள், முதியவா்கள், பெண்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.
எனவே, வெறிநாய்களை பிடிப்பதோடு, அதிகரித்து வரும் நாய் கூட்டத்தை கட்டுப்படுத்தி, பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கிட சம்பந்தப்பட்ட துறையினா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.