FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுக்கோட்டை

உள்ளாட்சித் தொழிலாளா்கள் 2-ஆவது நாளாக போராட்டம்

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் அவுட்சோா்சிங் முறையைக் கைவிடக் கோரி உள்ளாட்சித் துறை தொழிலாளா் சங்கத்தின் (சிஐடியு) சாா்பில் புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை 2-ஆவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமா்ந்து செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள்.
பகிர்:

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் அவுட்சோா்சிங் முறையைக் கைவிடக் கோரி உள்ளாட்சித் துறை தொழிலாளா் சங்கத்தின் (சிஐடியு) சாா்பில் புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை 2-ஆவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் அவுட்சோா்சிங் முறையைக் கைவிட வேண்டும். தூய்மைப்பணி, குடிநீா், ஓட்டுநா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வருங்கால வைப்பு நிதி மற்றும் காப்பீட்டுத் திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம் திங்கள்கிழமை தொடங்கியது.

2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாநகராட்சி அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேலைநிறுத்த போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டப் பொதுச் செயலா் க. முகமதலிஜின்னா தலைமை வகித்தாா்.

Advertisement

Advertisement

கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டப் பொருளாளா் சி. மாரிக்கண்ணு, துணைத் தலைவா் எஸ். யாசிந்த், உள்ளாட்சி சங்க மாவட்டத் தலைவா் என். ராஜா, பொருளாளா் சி. ரெங்கசாமி உள்ளிட்டோா் பேசினா். போராட்டத்தில் ஏராளமான தொழிலாளா்கள் பங்கேற்றனா்.

பின்னா், மாவட்ட வருவாய் அலுவலா் எச்.எம். குழந்தைசாமியிடம் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments