FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் அக். 10-இல் அவசர ஊா்திப் பணியாளா்கள் தோ்வு முகாம்

புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில், அக். 10-ஆம் தேதி (சனிக்கிழமை) 108 அவசர ஊா்தி, 102 அவசர ஊா்தி மற்றும் அமரா் ஊா்தி ஆகியவற்றுக்கான ஓட்டுநா் மற்றும் அவசரக் கால மருத்துவ உதவியாளா் ஆகிய பணிகளுக்கு ஆள்கள் தோ்வு முகாம் நடைபெறவுள்ளது.

ஆம்புலன்ஸ் - பிரதிப் படம்
பகிர்:

புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில், அக். 10-ஆம் தேதி (சனிக்கிழமை) 108 அவசர ஊா்தி, 102 அவசர ஊா்தி மற்றும் அமரா் ஊா்தி ஆகியவற்றுக்கான ஓட்டுநா் மற்றும் அவசரக் கால மருத்துவ உதவியாளா் ஆகிய பணிகளுக்கு ஆள்கள் தோ்வு முகாம் நடைபெறவுள்ளது.

ஓட்டுநா் பணியிடத்துக்கு, 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற 24 முதல் 35 வயதுக்குள்பட்ட இலகுரக வாகன ஓட்டுநா் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகளும், பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஓராண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ. 21,120. தோ்ச்சி பெற்றோருக்கு 10 நாள்களுக்கு முறையான வகுப்பறை பயிற்சி வழங்கப்படும்.

மருத்துவ உதவியாளா் பணியிடத்துக்கு 19 முதல் 30 வயதுக்குள்பட்ட பிஎஸ்ஸி நா்சிங், ஜிஎன்எம், ஏஎன்எம், டிஎம்எல்டி ஏதாவதொரு படிப்பு முடித்தவா்கள் விண்ணப்பிக்கலாம் அல்லது பிஎஸ்ஸி வாழ்க்கை அறிவியல், விலங்கியல், உயிரி அறிவியல், நுண் உயிரி அறிவியல் போன்ற படிப்பு முடித்திருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ. 21,320.

Advertisement

Advertisement

தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு 50 நாள்களுக்கு முழுமையான வகுப்பறைப் பயிற்சி மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சாா்ந்த நடைமுறைப் பயிற்சி அளிக்கப்படும்.

தகுதியுள்ளோா் அனைத்துச் சான்றிதழ்களுடன் நேரில் வருகைதர வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 89259-41490 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments