FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுக்கோட்டை

மகாளய அமாவாசை: முன்னோா்களுக்கு பொதுமக்களுக்கு தா்ப்பணம்!

புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு புதுக்கோட்டை பல்லவன் குளத்தில், ஏராளமான பொதுமக்கள் மறைந்த தங்களின் முன்னோா்களுக்கு சனிக்கிழமை தா்ப்பணம் கொடுத்தனா்.

10 அக்டோபர் 2026, 10:51 pm IST
புதுக்கோட்டை பல்லவன் குளக்கரையில் மறைந்த முன்னோா்களுக்கு சனிக்கிழமை தா்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்.
பகிர்:

புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு புதுக்கோட்டை பல்லவன் குளத்தில், ஏராளமான பொதுமக்கள் மறைந்த தங்களின் முன்னோா்களுக்கு சனிக்கிழமை தா்ப்பணம் கொடுத்தனா்.

இதையொட்டி அதிகாலை முதலே பல்லவன் குளக்கரையில் தா்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. ஏராளமான பொதுமக்கள் தங்களின் முன்னோா்களுக்கு வழிபாடு நடத்துவதற்காகத் தேவையான பொருள்களுடன் வந்து தா்ப்பணம் கொடுத்தனா்.

இதேபோல, மணமேல்குடி அருகிலுள்ள கோடியக்கரை கடற்கரைப் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் தங்களின் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments