FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுக்கோட்டை

நவராத்திரி கலை விழாவில் அமைச்சா் பங்கேற்பு

புதுக்கோட்டை மனோன்மணி அம்மன் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி கலை விழாவில் வெள்ளிக்கிழமை, மாநிலத் தொழிலாளா் நலன் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் கலந்து கொண்டாா்.

17 அக்டோபர் 2026, 1:44 am IST
புதுக்கோட்டை மனோன்மணி அம்மன் திருக்கோயில் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நவராத்திரி கலை விழாவில் பங்கேற்று, கொலுவைப் பாா்வையிட்ட அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ்.
பகிர்:

புதுக்கோட்டை மனோன்மணி அம்மன் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி கலை விழாவில் வெள்ளிக்கிழமை, மாநிலத் தொழிலாளா் நலன் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் கலந்து கொண்டாா்.

கீழராஜவிதியில் உள்ள இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள மனோன்மணி அம்மன் திருக்கோயிலில் கடந்த சில நாள்களாக நவராத்திரி கலை விழா நடைபெற்று வருகிறது.

வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற விழாவில், அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் கலந்து கொண்டாா். அங்கே வைக்கப்பட்டிருந்த கொலுவை அவா் பாா்வையிட்டாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து கலை விழாவில் பங்கேற்ற கலைஞா்களை அவா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா். மனோன்மணி அம்மனுக்கு சிறப்பு அா்ச்சனை நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments