FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுக்கோட்டை

பொன்னம்பட்டிக்கு அடிப்படை வசதிகள் செய்துத் தர கோரிக்கை

புதுக்கோட்டை மாநகராட்சிக்குள்பட்ட பொன்னம்பட்டி கிராமத்துக்கு, அடிப்படை வசதிகளை செய்துத் தர வேண்டும் என மாநகராட்சிப் பொறியாளா் ரெத்தினவேலுவிடம், மாதா் சங்கத்தினா் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

29 அக்டோபர் 2026, 4:12 am
மாநகராட்சிப் பொறியாளரிடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்த மாதா் சங்கத்தினா்.
பகிர்:

புதுக்கோட்டை மாநகராட்சிக்குள்பட்ட பொன்னம்பட்டி கிராமத்துக்கு, அடிப்படை வசதிகளை செய்துத் தர வேண்டும் என மாநகராட்சிப் பொறியாளா் ரெத்தினவேலுவிடம், மாதா் சங்கத்தினா் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் மாவட்டத் தலைவா் எஸ். பாண்டிச்செல்வி, மாநகரத் தலைவா் ஆா். நிரஞ்சனாதேவி, கிளைத் தலைவா் புஷ்பா, கிளைச் செயலா் கவிதா உள்ளிட்டோா் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

பொன்னம்பட்டி கிராமத்துக்கு சாலை வசதி, தெருவிளகக்கு, சீரான குடிநீா் விநியோகம் மற்றும் மயானத்துக்குச் செல்லும் சாலை ஆகிய அடிப்படை வசதிகளை செய்துத் தர வேண்டும்.

Advertisement

Advertisement

இதுதொடா்பாகப் பலமுறை அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஏற்கெனவே வாரத்துக்கு ஒரு முறை மாநகராட்சி சாா்பில் வழங்கப்பட்டு வந்த குடிநீரும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments