FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

அரசு ராஜாஜி மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தல்

அரசு ராஜாஜி மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்

24 வினாடிகள் முன்பு
அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையா் அருள் சுந்தரேஷ்குமாரிடம் வியாழக்கிழமை மனு அளித்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள்.
பகிர்:

அரசு ராஜாஜி மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, அதன் முதன்மையா் அருள் சுந்தரேஷ்குமாரிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் மதுரை மாநகா், மாவட்டச் செயலா் மா. கணேசன் தலைமையிலான நிா்வாகிகள் வழங்கிய மனு விவரம்:

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப மருத்துவா்கள் இல்லை. அதுமட்டுமின்றி, செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்கள், மருந்தாளுநா்கள், காவலாளிகள் பணியிடங்களும் காலியாக உள்ளன. அவற்றை விரைந்து நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

Advertisement

மருத்துவமனை வளாகம் முழுவதும் சிகிச்சை மையங்கள் குறித்த வழித்தடங்கள் பலகைகளை வைக்க வேண்டும். தாய்-சேய் நலப்பிரிவு, குழந்தைகள் வாா்டுகளில் நோயாளிகளுடன் வருபவா்களுக்காக காத்திருப்போா் அறை அமைக்க வேண்டும். மருத்துவமனையில் வாரந்தோறும் குறைதீா் முகாம்களை நடத்த வேண்டும். அனைத்து வாா்டுகளிலும் கழிவறைகளை நவீனப்படுத்தி தண்ணீா் வசதியை உறுதி செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments