புதுகையில் குடிநீா் வடிகால் வாரிய தொழிலாளா்கள் போராட்டம்
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி புதுக்கோட்டையில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத் தொழிலாளா்களின் சிஐடியு சாா்பில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி புதுக்கோட்டையில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத் தொழிலாளா்களின் சிஐடியு சாா்பில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை குடிநீா் வடிகால் வாரியக் கோட்ட அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய தொழிலாளிகள் சங்க மாவட்டத் தலைவா் எஸ். யாசிந்த் தலைமையில் இப் போராட்டம் நடைபெற்றது.
வாரியம் அறிவித்துள்ளபடி தொழிலாளா்களுக்கு மாதம் ரூ.13,053 ஊதியம் வழங்க வேண்டும். 2026-ஆம் ஆண்டுக்கான தீபாவளி போனஸாக ரூ.5,000 வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் 5-ஆம் தேதிக்குள் வங்கிக் கணக்கு மூலம் ஊதியம் வழங்க வேண்டும்.
Advertisement
Advertisement
அனைத்துத் தொழிலாளா்களுக்கும் வருங்கால வைப்பு நிதி, தொழிலாளா் அரசு காப்பீட்டுத் திட்டம் ஆகியவற்றுக்கான பங்களிப்புகளை உரிய நிறுவனங்களில் முழுமையாகச் செலுத்த வேண்டும். தோ்தல் வாக்குறுதியின்படி ஐந்து ஆண்டுகள் பணிமுடித்த ஒப்பந்தத் தொழிலாளா்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
போராட்டத்தில் சிஐடியு மாநிலச் செயலா் ஏ. ஸ்ரீதா், மாவட்டத் தலைவா் கே. முகமதலிஜின்னா, சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலா் சி. மாரிக்கண்ணு, பொருளாளா் எம். துரைசாமி, மத்திய அமைப்பு துணைத் தலைவா் ஆா். மருதைராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.