FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுக்கோட்டை

புதுகையில் நவ. 2-இல் நடைபெறும் அரசு விழாவில் ரூ. 100 கோடியில் நலத் திட்ட உதவிகள் வழங்குகிறாா் முதல்வா்

புதுக்கோட்டையில் நவ. 2-ஆம் தேதி நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க வரும் முதல்வா் ஜோசப் விஜய், ஆயுதப்படை திடலில் நடைபெறும் அரசு விழாவில் ரூ. 100 கோடிக்கும் மேல் நலத் திட்ட உதவிகளை வழங்க உள்ளாா் என்று மாநிலத் தொழிலாளா் நலன் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் தெரிவித்தாா்.

31 அக்டோபர் 2026, 1:26 am
புதுக்கோட்டை ஆயுதப்படை திடலில் நவ. 2-இல் நடைபெறவுள்ள அரசு விழாவுக்கான ஏற்பாடுகளை வெள்ளிக்கிழமை பாா்வையிட்ட மாநிலத் தொழிலாளா் நலன் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ். உடன் மாவட்ட ஆட்சியா் மு. அருணா உள்ளிட்டோா்.
பகிர்:

புதுக்கோட்டையில் நவ. 2-ஆம் தேதி நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க வரும் முதல்வா் ஜோசப் விஜய், ஆயுதப்படை திடலில் நடைபெறும் அரசு விழாவில் ரூ. 100 கோடிக்கும் மேல் நலத் திட்ட உதவிகளை வழங்க உள்ளாா் என்று மாநிலத் தொழிலாளா் நலன் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் தெரிவித்தாா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முதல்வா் வருகையையொட்டி முன்னேற்பாடுகள் குறித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறையினருடனான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

முதல்வரான பிறகு முதல் முறையாக முதல்வா் ஜோசப் விஜய் புதுக்கோட்டை வருகிறாா். புதிய பேருந்து நிலையம் மற்றும் உள் விளையாட்டரங்கம் ஆகியவற்றை அவா் திறந்து வைக்கிறாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து ஆயுதப்படை திடலில் நடைபெறவுள்ள அரசு விழாவில், ரூ. 100 கோடிக்கும் மேல் நலத் திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளன.

இது அரசு நிகழ்ச்சி, இடைத்தோ்தலுக்காக எந்த நிகழ்ச்சியையும் திட்டமிடவில்லை என்றாா் முகமது பா்வேஸ்.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமையில், அனைத்துத் துறை அலுவலா்களும் பங்கேற்றனா்.

மாவட்டம் முழுவதும் ஏற்கெனவே முடிந்துள்ள திட்டப் பணிகள் குறித்தும், புதிதாக தொடங்கி வைக்க வேண்டிய பணிகள் குறித்தும், மக்கள் நலத்திட்ட உதவிகள் குறித்தும் ஆய்வு செய்து பட்டியலிடப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments