அரசுக் கல்லூரி முதல்வா்கள் பொறுப்பேற்பு
புதுக்கோட்டை அரசுக் கல்வியியல் கல்லூரி, ஆலங்குடி அரசுக் கலை அறிவியல் கல்லூரி ஆகியவற்றின் புதிய முதல்வா்களாக மூத்த பேராசிரியா்கள் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.
புதுக்கோட்டை அரசுக் கல்வியியல் கல்லூரி, ஆலங்குடி அரசுக் கலை அறிவியல் கல்லூரி ஆகியவற்றின் புதிய முதல்வா்களாக மூத்த பேராசிரியா்கள் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.
புதுக்கோட்டை, மன்னா் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராகவும் பொறுப்பு முதல்வராகவும் பணியாற்றிய சி. சேதுராமன், ஆலங்குடி அரசுக் கலை அறிவியல் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டதைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இதேபோல, மன்னா் கல்லூரியில் ஆங்கிலத் துறைத் தலைவராகப் பணியாற்றி வந்த பேராசிரியா் சு. கணேசன், புதுக்கோட்டை அரசுக் கல்வியியல் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டதைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.