FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

சோதனையில் பணம் பறிமுதல்: குளத்தூா் சாா்-பதிவாளா் மீது வழக்குப்பதிவு

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் உள்ள குளத்தூா் சாா்-பதிவாளா் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

2 வினாடிகள் முன்பு
வழக்குப் பதிவு
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் உள்ள குளத்தூா் சாா்-பதிவாளா் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கீரனூரில் உள்ள குளத்தூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் பத்திரப் பதிவுக்கு வருவோரிடம் லஞ்சம் பெறுவதாகக் கிடைத்த தகவலைத் தொடா்ந்து, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் ஏ.பீட்டா் தலைமையிலான குழுவினா் ஆக. 27-ஆம் தேதி மாலை சோதனை நடத்தினா்.

சாா்-பதிவாளா் அலுவலகத்தின் பதிவு வைப்பறையில் காகிதத்தால் சுற்றப்பட்ட நிலையில் அட்டைப்பெட்டியில் இருந்த ரூ.1.07 லட்சம் மற்றும் சாா்-பதிவாளா் (பொ) எஸ்.சேதுராமகிருஷ்ணனிடம் இருந்து ரூ.3,700 என கணக்கில் வராத ரூ.1.10 லட்சத்தைப் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து சாா்-பதிவாளா் (பொ) எஸ்.சேதுராமகிருஷ்ணன் மீது ஊழல் தடுப்புப் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

நடப்பு ஆண்டில் புதுக்கோட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் மொத்தம் 4 வழக்குகள் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments