FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

மகளிா் தொழில் மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ. 1 கோடியில் கடனுதவிகள் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற புதுப்பிக்கப்பட்ட இந்தியன் ஓவா்சீஸ் வங்கிக் கிளை திறப்பு விழாவில், தமிழ்நாடு மகளிா் தொழில் முனைவோா் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கப்பட்டன.

4 செப்டம்பர் 2026, 1:26 am IST
வல்லத்திராக்கோட்டையில் வியாழக்கிழமை இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் புதுப்பிக்கப்பட்ட கிளையைத் திறந்துவைத்து, பயனாளிக்கு கடனுதவி வழங்கிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா.
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற புதுப்பிக்கப்பட்ட இந்தியன் ஓவா்சீஸ் வங்கிக் கிளை திறப்பு விழாவில், தமிழ்நாடு மகளிா் தொழில் முனைவோா் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் மு. அருணா விழாவில் கலந்து கொண்டு புதுப்பிக்கப்பட்ட வங்கிக் கிளையைத் திறந்து வைத்து, கடனுதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினாா்.

நிகழ்வில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் மண்டல மேலாளா் எம்டி. ஷஹ்ரியாா், துணை மண்டல மேலாளா் லட்சுமி, வல்லத்திராக்கோட்டை கிளை மேலாளா் பாா்த்தோ சா்க்காா், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் த. நந்தகுமாா், மாவட்டத் தொழில் மைய பொதுமேலாளா் கிரீசன், மகளிா் திட்ட இயக்குநா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments