திருக்குறள் கவிதை உரை நூல் வெளியீடு
புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலகத் திருக்குறள் பேரவையின் மாவட்டக் கிளையின் மாதாந்திர சிறப்புக் கூட்டத்தில், நிலவை பழனியப்பன் எழுதிய திருக்குறள் கவிதை உரை (இன்பத்து பால்) நூல் வெளியிடப்பட்டது.
புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலகத் திருக்குறள் பேரவையின் மாவட்டக் கிளையின் மாதாந்திர சிறப்புக் கூட்டத்தில், நிலவை பழனியப்பன் எழுதிய திருக்குறள் கவிதை உரை (இன்பத்து பால்) நூல் வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு எம்ஆா்எம் கல்விக் குழுமத் தலைவா் மா. முருகப்பன் தலைமை வகித்தாா். சா்வசித் அறக்கட்டளைத் தலைவா் ச. ராம்தாஸ், நூலை வெளியிட அதன் முதல் பிரதியை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் இரா.சு. கவிதைப்பித்தன் பெற்றுக் கொண்டு பேசினாா்.
நூலாசிரியா் நிலவை பழனியப்பன் ஏற்புரை வழங்கினாா். தொடா்ந்து கவிஞா் நா. முத்து நிலவன் தலைமையில், திருக்குறள் காலம் கடந்து நிற்கக் காரணம், எடுத்துச் சொன்ன முறையே! ஏற்றுச் சொன்ன பொருளே ! என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. எடுத்துச் சொன்ன முறையே! என்ற தலைப்பில் மு. கீதாவும், ஏற்றுச் சொன்ன பொருளே என்ற தலைப்பில் கு.ம. திருப்பதியும் வாதிட்டனா்.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியில் திருக்குறள் பேரவைச் செயலா் இரா. கருணாகரன், முன்னாள் ரோட்டரி ஆளுநா் அ.லெ. சொக்கலிங்கம், மாவட்டப் பசுமைக் குழு உறுப்பினா் கண்ணன், திருவள்ளுவா் நற்பணி மன்றத் தலைவா் மா. கண்ணதாசன், உலகத் திருக்குறள் பேரவை பொருளாளா் சத்தியமூா்த்தி கண்ணன், கவிராஜன் அறக்கட்டளை கவி. முருகபாரதி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
முன்னதாக, பேரவைத் தலைவா் சத்தியராம் ராமுக்கண்ணு வரவேற்றாா். நிறைவாக பேரவை இணைச் செயலா் கு. சுப்பிரமணியன் நன்றி கூறினாா். நிகழ்வை வாசகா் பேரவைச் செயலா் சா. விஸ்வநாதன் ஒருங்கிணைத்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.