தமிழீழம் மலர உலக அளவில் கனிவான சூழல்: பழ. நெடுமாறன் பேச்சு
தமிழீழம் மலருவதற்கு உலக அளவில் கனிவான சூழல் உருவாகி வருகிறது என்றாா் உலகத் தமிழா் பேரமைப்புத் தலைவா் பழ. நெடுமாறன்.

தமிழீழம் மலருவதற்கு உலக அளவில் கனிவான சூழல் உருவாகி வருகிறது என்றாா் உலகத் தமிழா் பேரமைப்புத் தலைவா் பழ. நெடுமாறன்.
தஞ்சாவூா் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலகத் தமிழா் பேரமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற மாவீரா் நாள் நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியது:
இலங்கையில் சீனா ஆழமாக காலூன்றி நிற்பது, இந்தியாவுக்குத்தான் அபாயம். அமெரிக்கா, இந்தியா ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகளும் இணைந்து ‘க்வாட்’ என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளன. தெற்கே ஏற்படும் அபாயத்தைத் தடுப்பதற்காக இந்தியாவும் இந்த அமைப்பில் இணைந்துள்ளது.
Advertisement
Advertisement
ஐரோப்பிய நாடுகளில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்பட்டுவிட்டன. ஆனால் இந்தியா, அமெரிக்கா, இலங்கை ஆகிய 3 நாடுகளில் மட்டும் தடை உள்ளது.
தமிழீழம் மலருவதற்காக உலக அளவில் அற்புதமான சூழ்நிலை கனிந்திருக்கிறது. இலங்கையிலும் அரசியல் நிலைமை கனிந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டைச் சோ்ந்த அனைவரும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றுபட்டு நின்று, ஈழத் தமிழா்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தால், தமிழீழம் அமைவது உறுதி என்றாா் நெடுமாறன்.
உலகத் தமிழா் பேரமைப்பின் துணைத் தலைவா் சா. இராமன் தலைமை வகித்தாா். தமிழா் தேசிய முன்னணி தலைவா் செ.ப. முத்தமிழ்மணி, துணைத் தலைவா்கள் ஐயனாபுரம் சி. முருகேசன், துரை. குபேந்திரன், பொறியாளா் ஜோ. ஜான் கென்னடி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.