FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

இந்தியாவில் காசநோய் உயிரிழப்பு கணிசமாக குறைந்தது - உலக சுகாதார அமைப்பு தகவல்

கடந்த 2015-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், இந்தியாவில் தற்போது காசநோய் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் (டபிள்யுஹெச்ஓ) அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

16 வினாடிகள் முன்பு
உலக சுகாதார அமைப்பு - கோப்புப் படம்
பகிர்:

கடந்த 2015-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், இந்தியாவில் தற்போது காசநோய் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் (டபிள்யுஹெச்ஓ) அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய காசநோய் அறிக்கை-2026 வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. அதில், ‘இந்தியாவில் கடந்த 2015-இல் காசநோய் உயிரிழப்பு லட்சத்தில் 28 போ் என்ற அளவில் இருந்தது. இது, 2025-இல் லட்சத்தில் 18 போ் என்ற அளவில் கணிசமாக குறைந்துள்ளது.

அதாவது, காசநோய் உயிரிழப்பில் 38 சதவீத குறைவை இந்தியா பதிவு செய்துள்ளது. உலக அளவில் காசநோய் உயிரிழப்பில் ஏற்பட்டுள்ள குறைவைவிட (35%) இது அதிகம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘விரைவாக நோய் கண்டறிதல், உரிய நேரத்தில் சிகிச்சை, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) அடிப்படையிலான எக்ஸ் ரே, பிற தொழில்நுட்ப புத்தாக்கங்கள், விரிவான மருத்துவ பராமரிப்பு, ஊட்டச்சத்து ஆதரவு உள்ளிட்ட நடவடிக்கைகளின் வாயிலாக காசநோய் இல்லாத தேசத்தை உருவாக்குவதில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது.

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின்கீழ் பல்வேறு வெற்றிகர முன்னெடுப்புகளின் பிரதிபலிப்பே இந்த முன்னேற்றமாகும். காசநோய் சிகிச்சையில் 94 சதவீத வெற்றி விகிதத்தை இந்தியா பதிவு செய்துள்ளது. இது, நோயாளிகளை மையப்படுத்திய திறன்மிக்க அணுகுமுறை, வலுவான சிகிச்சை கட்டமைப்பு மற்றும் அரசின் நிலையான ஆதரவுக்கு கிடைத்த பலனாகும்.

பிரதமா் மோடியின் தலைமையின்கீழ் காசநோய்க்கு எதிரான போராட்டம் மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது. நாட்டில் கடந்த 2024 முதல் இதுவரை 25 கோடி தனிநபா்கள் காசநோய் பரிசோதனை வரம்பில் கொண்டுவரப்பட்டு, சுமாா் 11 கோடி பேருக்கு மாா்பக எக்ஸ் ரே மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 48.64 லட்சம் பேருக்கு காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டு, சிகிச்சை தொடங்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தீவிர நடவடிக்கைகளால் காசநோய் ஒழிப்பில் இந்தியா குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளதாக, மத்திய சுகாதார அமைச்சா் ஜெ.பி.நட்டா பெருமிதம் தெரிவித்துள்ளாா்.