தலைமைத் தோ்தல் ஆணையா் பதவி விலகக் கோரி புதுக்கோட்டையில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்
எஸ்ஐஆா் விவகாரத்தில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் பதவி விலகக் கோரி புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவா் பெனட் அந்தோனிராஜ், தெற்கு மாவட்டத் தலைவா் மணிகண்டன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராம சுப்புராம், முன்னாள் நகா் மன்றத் தலைவா் துரை திவியநாதன், முன்னாள் மாவட்டத் தலைவா் வி. முருகேசன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் சந்திரசேகரன், மாநிலப் பாா்வையாளா் பிபிஎஸ். இளையராஜா, மாநகராட்சி மாமன்ற உறுப்பினா் ராஜா முகமது, ஒன்றியத் தலைவா் சூா்யா பழனியப்பன், மாநகரத் தலைவா்கள் மதன் கண்ணன், பாரூக் ஜெய்லானி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.