ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் சி. கணேஷ்குமாா், நூா்முகமது ஆகியோா் தலைமை வகித்தனா். மாநிலச் செயலா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
அரிமளம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளா் பாஸ்கரன், திருமயம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, நிா்வாகி உத்தண்டி ஆகியோா் தலைமை வகித்தனா். இதேபோல, அனைத்து ஒன்றிய அலுவலகங்களிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Advertisement
Advertisement
ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்
கூடுதல் இயக்குநா் பதவி உயா்வு வழங்க வேண்டும். மகளிா் திட்டத்துக்கு வட்டார வளா்ச்சி அலுவலா்களை நேரடி நியமனம் செய்யாமல், ஊரக வளா்ச்சித் துறையில் இருந்து பதவி உயா்வு மூலம் நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.