FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இலவசமாக மனுக்கள் எழுத மகளிர் குழுக்கள் நியமனம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு வரும் பொதுமக்களுக்கு இலவசமாக மனு எழுதிக் கொடுக்க மகளிர் சுய உதவிக்குழுப் பெண்களை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு வரும் பொதுமக்களுக்கு இலவசமாக மனு எழுதிக் கொடுக்க மகளிர் சுய உதவிக்குழுப் பெண்களை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பொதுமக்கள் தங்களின் பிரச்னைகளையும், கோரிக்கைகளையும் மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக கொடுத்து முறையிடுவது வழக்கம்.

அவ்வாறு வருபவர்களில் பெரும்பாலானோர் கிராமப்புறப் பகுதியைச் சேர்ந்த எழுத, படிக்கத் தெரியாதவர்கள். இவர்கள் மனு எழுத அருகில் உள்ளவர்களின் உதவியையோ அல்லது ஆட்சியரக அலுவலகம் அருகே மனு எழுதிக் கொடுக்கும் தொழில் செய்பவர்களையோ நாட வேண்டியுள்ளது. இதனால் அவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வந்தனர்.

Advertisement

Advertisement

இதைத் தடுக்க மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன், தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒவ்வொரு ஒன்றியத்திலிருந்தும் 2 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்து பொதுமக்களுக்கு இலவசமாக மனு எழுதி கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு மனு எழுதுவது தொடர்பாக அண்மையில் ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. இதையடுத்து பயிற்சி பெற்ற 21 பேர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்துக்கு மனு அளிக்க வந்தவர்களுக்கு இலவசமாக மனு எழுதிக் கொடுத்தனர்.

மனு எழுதிக் கொடுக்கும் பணியில் ஈடுபடும் மகளிர் சுய உதவிக்குழுப் பெண்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில், திங்கள்கிழமைக்கு மட்டும் ஒரு குறிப்பிட்ட தொகை தினப்படியாக வழங்கப்படவுள்ளது. முதன்முறையாக மனு எழுத பெண்களை நியமித்துள்ளதால், பொதுமக்கள் பலருக்கும் தெரியாததால் முதல்நாளில் 100-க்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே மனு எழுதிக் கொடுக்கப்பட்டது.

இந்த எண்ணிக்கை வரும் வாரங்களில் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments