கும்பகோணத்தில் நாளை நாட்டியாஞ்சலி விழா தொடக்கம்
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் 15-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா மார்ச் 6-ம் தேதி தொடங்கி, மார்ச் 8-ம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறவுள்ளது.
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் 15-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா மார்ச் 6-ம் தேதி தொடங்கி, மார்ச் 8-ம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறவுள்ளது.
தொடக்க விழாவுக்கு நாட்டியாஞ்சலி அறக்கட்டளைத் தலைவர் ஜி.ஆர். மூப்பனார் தலைமை வகிக்கிறார். சிட்டியூனியன் வங்கியின் மேலாண்மை இயக்குநர் என். காமகோடி, விழாவை தொடங்கி வைக்கிறார்.
சிட்டியூனியன் வங்கி தலைவர் எஸ். பாலசுப்ரமணியம், இந்து சமய அறநிலையத் துறை மயிலாடுதுறை மண்டல இணை ஆணையர் கஜேந்திரன் ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர்.
Advertisement
Advertisement
இதைத் தொடர்ந்து, பரதம், மோகினியாட்டம், கதக் போன்ற நிகழ்ச்சிகள் மார்ச் 6-ம் தேதி மாலை 6.30 மணிக்கு தொடங்கி, இரவு 12 மணி வரை நடைபெறவுள்ளது.
நாட்டியாஞ்சலி விழாவில், நடிகை ஷோபனா, ருக்மணி விஜயகுமார், சொர்ணமால்யா, டாக்டர் பத்மா சுப்ரமணியம் மாணவிகள், மீனாட்சி சித்தரஞ்சன் மாணவிகள் மற்றும் இலங்கை, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாட்டில் வாழும் இந்திய கலைஞர்கள் பங்கேற்கிறார்கள்.
விழா ஏற்பாடுகளை நாட்டியாஞ்சலி செயலாளர் கே.என். ராஜகோபாலன் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.