மீமிசலில் தெப்பத் திருவிழா
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கல்யாண ராமசாமி கோயிலில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு தெப்பத்திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கல்யாண ராமசாமி கோயிலில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு தெப்பத்திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இப்பகுதியில் மிகவும் பிரசித்திபெற்ற இந்துசமய அறநிலைத் துறைக்குச் சொந்தமான இக்கோயிலின் ஆடிப்பெருந்திருவிழா கடந்த மாதம் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் 31-ஆம் தேதி நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற தெப்பத் திருவிழாவில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் கல்யாண ராமசாமி அருள்பாலித்தார். மீமிசல் மற்றும் சுற்றுவட்டார பக்தர்கள் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், இந்து சயம அறநிலைத்துறை செயல்அலுவலர் வேணுகோபால், தக்கார் பாண்டியராஜன், ஆய்வாளர் பாரதி உள்ளிட்டோர் செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.