தம்பிக்கோட்டை வடகாடு ஊராட்சி ஒன்றியப் பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள்
பட்டுக்கோட்டையை அடுத்த தம்பிக்கோட்டை வடகாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
பட்டுக்கோட்டையை அடுத்த தம்பிக்கோட்டை வடகாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பள்ளிகொண்டான் லாரல் மேல்நிலைப்பள்ளித் தாளாளர் வி.பாலசுப்பிரமணியன் தனது பேரக்குழந்தை சி. பூந்தமிழன் பிறந்த நாளை முன்னிட்டு, இப்பள்ளியில் பயிலும் 101 மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள், நோட்டுப்புத்தகம், எழுதுபொருள்கள், பள்ளி உபயோகத்திற்குத் தேவையான ஒலிபெருக்கி சாதனம் உள்பட ரூ. 60,000 மதிப்புள்ள பொருள்களை தனது சார்பில் நன்கொடையாக வழங்கினார்.
நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க மண்டல துணை ஆளுநர் ஆர்.ராஜேந்திரன், ஓய்வு பெற்ற காவல் துணைக் கண்காணிப்பாளர் சி. சாம்பசிவம், ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் சி.ஆறுமுகம் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், உள்ளுர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பள்ளித் தலைமை ஆசிரியை ஏ. கலைச்செல்வி நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.