FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

மாவட்ட விளையாட்டுப் போட்டிகள்: 561 பேர் பங்கேற்பு

தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன.

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 8:44 am IST
பகிர்:

தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன.
இப்போட்டிகளைக் கலை, பண்பாட்டுத் துறை இணை இயக்குநர் இரா. குணசேகரன் தொடங்கி வைத்தார். இதில், தடகளம், கூடைப்பந்து, கோ - கோ, நீச்சல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. இவற்றில் தடகளத்தில் 110 மாணவர்களும், 80 மாணவிகளும், நீச்சல் போட்டியில் 35 ஆண்களும், 24 பெண்களும் கலந்து கொண்டனர். மேலும், கூடைப்பந்து போட்டியில் 8 ஆண்களும் அணிகளும், 4 பெண்கள் அணிகளும், கோ - கோ போட்டியில் 8 ஆண்கள் அணிகளும், 6 பெண்கள் அணிகளும் பங்கேற்றன. இப்போட்டிகளில் மொத்தம் 561 பேர் பங்கேற்று விளையாடினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் க. பாபு,  மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மு. தேன்மதி,  மாவட்ட பளுதூக்குதல் பயிற்றுநர் து. செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments