FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்புப் பணி ஆய்வு

தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணியை மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை புதன்கிழமை ஆய்வு செய்தார்.

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணியை மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை புதன்கிழமை ஆய்வு செய்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தால் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட புதிய (எம்.3) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (5,500 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 3,490 கட்டுப்பாட்டுக் கருவிகள்) பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திலிருந்து ஜூலை 4-ம் தேதி எடுத்து வரப்பட்டன. இவை அனைத்தும் தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரப் பாதுகாப்பறையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பெங்களூரு பாரத் எலக்டிரானிக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 22 பொறியாளர்கள் முதல் கட்டச் சரிபார்ப்புப் பணியை ஆக. 27 முதல் மேற்கொண்டு வருகின்றனர். இதை நாள்தோறும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் பார்வையிட்டு வருகின்றனர். 
இப்பணியை மாவட்ட ஆட்சியர் புதன்கிழமை பார்வையிட்டார். அப்போது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
நிகழ்வின்போது கோட்டாட்சியர் சி. சுரேஷ், தேர்தல் தனி வட்டாட்சியர் ராமலிங்கம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.  இந்த முதல் கட்டச் சரிபார்ப்புப் பணி தொடர்ந்து நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments