கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகம் முன், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளும் கிராம
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகம் முன், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளும் கிராம நிர்வாக அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஐம்பது சதவீத பெண் விஏஓக்களுக்கு அவரவர் சொந்த மாவட்டத்தில் பணிபுரியும் விதமாக மாவட்ட மாறுதல் வழங்க வேண்டும். விஏஓ அலுவலகங்களுக்கு மின் வசதி, கழிப்பறை, குடிநீர் வசதிகள் செய்து தர வேண்டும். காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கத்தினர் காலவரைற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அச்சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலர் செல்லதுரை தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் முருகேசன், துணைத்தலைவர் விஜயபாஸ்கர், பொருளாளர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.