பாபநாசம் அருகே வீடு புகுந்து திருட்டு
தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் அருகே திங்கள்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை மர்ம நபர் பறித்துச் சென்றார்.
தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் அருகே திங்கள்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை மர்ம நபர் பறித்துச் சென்றார்.
பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை கிராமம்,கீழ குடியானர் தெருவைச் சேர்ந்தவர் செல்லம்மா (65),இவர் திங்கள்கிழமை இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர் செல்லம்மா அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியையும், வீட்டில் இருந்த ரூ. 3ஆயிரத்தையும் திருடிக் கொண்டு ஓடிவிட்டாராம். இதுகுறித்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.