தாராசுரத்தில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு
கும்பகோணத்தை அடுத்த தாராசுரத்தில் புதன்கிழமை பிற்பகலில் ஆட்டோ ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கும்பகோணத்தை அடுத்த தாராசுரத்தில் புதன்கிழமை பிற்பகலில் ஆட்டோ ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
தாராசுரம் மிஷின் தெருவை சேர்ந்தவர் வீராசாமி மகன் ராமச்சந்திரன் (40). இவர் தாராசுரம் மார்க்கெட்டில் சுமை ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் புதன்கிழமை பிற்பகலில் ராமச்சந்திரன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது, பைக்குகளில் வந்த 6 பேர், அவரது கை மற்றும் தலையில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடி விட்டதாகத் தெரிகிறது.
பலத்த காயமடைந்த ராமச்சந்திரனை அப்பகுதியினர் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிந்து, ராமச்சந்திரனை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.